ஹாலிவுட் நடிகை நிக்கோல் மர்ம சாவு-கொலை?

Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் நடிகை நிக்கோல் ஸ்மித் மியாமியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பெரும்சர்ச்சை நிலவுகிறது.

நிக்கோல் ஸ்மித்தின் வாழ்க்கை பெரும் பரபரப்பும், சர்ச்சைகளும் நிறைந்தது. ஆரம்பத்தில் அவர் சாதாரணமாடல்தான். ஆனால் பிளேபாய் பத்திரிக்கையில் அவரது நிர்வாணப் படங்கள் தொடர்ந்து வந்து அவருக்கென்று தனிரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியது.

அவரது உடல் அழகின் அட்டகாச அழகைப் பார்த்து ரசிகர்கள் பிளேபாய் பத்திரிக்கைகளை போட்டி போட்டுவாங்கினர். தனது நிர்வாணப் படங்களால் பெரும் புகழை அடைந்தார் நிக்கோல். இதையடுத்து மாடலிங்கிலும்பிரபலமானார். பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஏகப்பட்ட போர்ன் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

நேக்கட் கன், பைனல் அசால்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதான நிக்கோல், கடந்த 1994ம்ஆண்டு 89 வயதான எண்ணை நிறுவன அதிபர் ஹோவர்ட் மார்ஷல்ஸை மணந்தபோது ஹாலிவுட்டே பரபரப்பானது. ஆனால்கல்யாணம் ஆன அடுத்த ஆண்டே, ஹோவர்ட் மரணமடைந்தார்.

ஹோவர்டின் மனைவி என்ற வகையில் நிக்கோலுக்கு கிட்டத்தட்ட ரூ. 2,370 கோடி மதிப்புள்ள சொத்து கிடைத்தது.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நிக்கோலுக்கு பஹாமஸ் தீவில் குழந்தை பிறந்ததாக பரபரப்புச் செய்திவெளியானது.

இப்படி பரபரப்புடன் வாழ்ந்து வந்த நிக்கோல், ஹாலிவுட்டில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

நிக்கோலின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் விஷம் அருந்தி இறந்தாரா என்பதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் போதை மருந்து மூலம் அவரது உடலில் விஷம் ஏறியதா என்பது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

இதில் அவரது வயிற்றில் போதை மருந்து ஏதும் இல்லை. ஆனால் அவரது அறையில் போதை மருந்து காலி பாக்கெட்இருந்தது. மேலும் முதுகில் சிராய்ப்பு காயம் காணப்படுகிறது. எனவே நிக்கோல் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும்என்று கூறப்படுகிறது.

நிக்கோலின் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை அடைய உறவினர்களால் அவர் கொல்லப்பட்டிருக்க்க கூடும் என்றசந்தேகமும் நிலவுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர். மேலும் நிக்கோலுக்குஉதவியாக இருந்த நர்ஸிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+