களை கட்டும் மாநகராட்சி தேர்தல் பிரசாரம்
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பிரசாரம் மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மறு தேர்தலில் 33 வார்டுகளுக்கு போட்டியின்றி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கும் வருகிற 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
முக்கியக் கட்சிகளான அதிமுக, மதிமுக ஆகியவை போட்டியில் இல்லாததாலும், திமுக கூட்டணியினரே மீண்டும் வெற்றி பெறுவார்கள் என்றபொதுவான எதிர்பார்ப்பாலும், தேர்தல் களம் படு டல்லாக உள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது சூறாவளி பிரசாரத்தைத் தொடங்கினார். இதையடுத்து திமுக கூட்டணியினரும் தங்களதுபிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
திமுக கூட்டணியின>ன் பலத்துக்கு முன்பு தேமுதிக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பலவீனமாக காணப்பட்டாலும் கூட தே.திகவினர் படு சுறு சுறுப்பாகபிரசாரத்தில் குதித்துள்ளனர். தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதேபோல பாஜக வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேக>த்து வருகின்றனர். பாஜக வேட்பாளர்களில் 89வது வார்டில் போட்டியிடும்சுபசித்ரா படு வித்தியாசமாக பிரசாரம் செய்கிறார்.
கடந்த தேர்தலிலும் இதே வார்டில் இவர் போட்டியிட்டார். பட்டுச் சேலைசலசலக்க 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் (அவர்களுக்கும் பட்டுச்சேலைதான் காஸ்ட்யூம்) அவர் பிரசாரத்திற்குக் கிளம்புகிறார்.
தாம்பூலத் தட்டு சகிதம் செல்லும் சுபசித்ராவும், மற்றவர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடுங்க, எங்களுக்குப் போடாவிட்டாலும் பரவாயில்லை,யாருக்காவது கண்டிப்பாக ஓட்டுப் பாடுங்க, போடாம இருந்திடாதீங்க என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
ஓட்டுப் போட வாங்க என்ற தலைப்பில் அழைப்பிதழும் அடித்து வாக்காளர்கள் கையில் திணிக்கிறார்கள். இந்த நூதன பிரசாரத்தை மாநில மகளிர்அணி தலைவி லலிதா சுபாஷ், துணைத் தலைவர் குமாரவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பாஜகவினர் இப்படி காமடியாக பிரசாரம் செய்து வரும் வேளையில், தேமுதிகவினர் மத்தியில் படு சீரியஸான நிலை காணப்படுகிறது. எப்படியும் சிலவார்டுகளை அள்ளி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பல பகுதிகளில் தேமுதிகவினருக்கு ஆதரவாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறைமுகமாக ஆதரவு கொடுப்பதையும் காணமுடிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications