இன்று ரயில்வே பட்ஜெட்-கட்டணம் குறையும்!
டெல்லி:ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் 2ம் வகுப்பு மற்றும் உயர் வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். லாலு ரயில்வே அமைச்சரான பின் ரயில்வே பெரும் லாபத்தில்இயங்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ரூ. 11,000 கோடி லாபம் ஈட்டிக் காட்டியது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே வருவாயைபெருக்கிக் காட்டினார்.
இந் நிலையில் தனது மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார் லாலு. இதில் 2ம் வகுப்பு பயணிகள் கட்டணத்தையும் விமானநிறுவனங்களுடன் போட்டி போட உயர் வகுப்பு கட்டணத்தையும் அவர் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த சரக்குக் கட்டணத்தையும் அவர் குறைப்பார் என்று தெரிகிறது. சரக்கு கட்டணத்தைகுறைத்து லாரிகளுடன் ரயில்வே போட்டியிட அவர் வழி வகுப்பார் என்று தெரிகிறது.
சமீபத்தில் தான் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. இப்போது அதே காரணத்துக்காக ரயில்கட்டணத்தையும் குறைக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு நிதியமைச்சகமும் பிரதமரும் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே கட்டணக்குறைப்புக்கு தயாராகிவிட்ட லாலுவுக்கு இந்த கோரிக்கை பெரிதும் உதவியாக வந்துவிட்டது.
அதே போல சீசன் டிக்கெட் கட்டணங்களும் குறையலாம் எனத் தெரிகிறது.
2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 3,50,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.இதில் ரூ. 1,50,000 கோடியை தனியார் துறையிடம் இருந்து ரயில்வே திரட்ட உள்ளது.
சரக்கு பெட்டிகளை தனியாரே சொந்தமாக வைத்து நடத்திக் கொள்ள அனுமதித்தது போல், தனியார் நிறுவனங்களே பயணிகள் பெட்டிகளையும்சொந்தமாக வைத்து இயக்க அவர் பட்ஜெட்டில் அனுமதியளிப்பார் எனத் தெரிகிறது.
இது தவிர ரயில்வே துறைக்கு சொந்தமான 43,000 ஹெக்டேர் நிலங்களை தனியாருக்கு குத்தகை விட்டு லாபம் ஈட்டும் திட்டமும் லாலுவிடம்உள்ளது. இந்த நிலங்களில் தனியாருடன் இணைந்து வணிக வளாகங்கள், சந்தைகளை நடத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications