காங்.தலைவருடன் ஈழ எம்.பிக்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள், சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசினர்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்த் ஆகியோர் சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்கிருஷ்ணசாமியை நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் படும் கஷ்டங்களை கிருஷ்ணசாமியிடம் எடுத்துசொன்னோம். எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம் என கூறினர்.
இதேபோல புதுவை சென்ற தமிழ் எம்.பிக்கள் அம்மாநில முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications