நெல்லை அருகே இரட்டைக் கொலை; பதட்டம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:நெல்லை அருகே தச்சநல்லூர் என்ற இடத்தில் நேற்று இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில்பதட்டம் நிலவுகிறது.

தச்சநல்லூர் அருகே உள்ள அழகேரி ஊர் நாட்டாமை இசக்கியின் மகன் கண்ணன் (27). விவசாயக் கூலித் தொழிலாளியாக உள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் குமார். இவருக்கு வயது 21.

இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், திருமணமாகாத இளைஞர்கள். ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது,தாராபுரம் அருகே உள்ள மேலக்கரை என்ற இடத்தில் ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது.

கையில் இருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக அக்கும்பல் வெட்டித் தள்ளியது. உயிர் தப்பிக்க இருவரும் ஓடியும் கூட விடாமல்துரத்தி துரத்தி வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இரட்டைக் கொலை தொடர்பாக தச்சமங்கலம், தாராபுரம்,அழகனேரி ஆகிய பகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. ஊர் மக்கள் ஒன்று திரண்டு கொலை நடந்த பகுதியில்குழுமினர்.

சடலங்களுடன் நெல்லை-மதுரை சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இந்த இரட்டைக் கொலைக்கு இரு சமுதாயத்தின>டையே நிலவும்முன்விரோதமே காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் சவ அடக்கம் தொடர்பாக இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை உதவி காவல் ஆணையர் மரிய ஜார்ஜிடம்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது. இதனால் ஊர் மக்கள் கடும் கொதிப்படைந்தனர். நேற்று கொலை நடந்த இடத்திற்குமரிய ஜார்ஜ் வந்தபோது அவரை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர். மேலும், கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை இசக்கி,மரியஜார்ஜை ஒருமையில் விளித்து மிகக் கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மரியஜார்ஜ் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் அசோக்குமார் தாஸிடமும் கூடியிருந்தவர்கள் சரமாரியாக புகார் கூறினர்.

மேலும், பிரேதப் பரிசோதனைக்கு உடல்களை போலீஸார் கொண்டு செல்ல முயன்றபோது அவர்களைத் தடுத்தனர். அவர்களை ஆணையர்அசோக்குமார் தாஸ் சமாதானப்படுத்தி சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+