1 யானை , ஒரு பூனை, 2 சுண்டெலிகள்!

Subscribe to Oneindia Tamil

பாசடெரே (செயின்ட் கீட்ஸ்-நெவிஸ்):உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இன்று வலுவான ஆஸ்திரேலிய அணி, சுண்டைக்காய் அணியான ஸ்காட்லாந்துடன் மோதுகிறது.இன்னொரு போட்டியில் கென்யாவும், கனடாவும் சந்திக்கின்றன.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை, மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. இந்த நிலையில்இரண்டாவது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

செயின்ட் கீட்ஸ்-நெவிஸ் தீவில் உள்ள பாசடெரே மைதானத்தில் நடைபெறும் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஸ்காட்லாந்தும்பங்கேற்கின்றன. செயின்ட் லூஸியா தீவில் நடைபெறும் போட்டியில் கென்யாவும், கனடாவும் சந்திக்கின்றன.

இந்த நான்கு அணிகளில் ஆஸ்திரேலியாவை யானை என்று சொன்னால், கென்யாவை பூனை எனலாம். ஸ்காட்லாந்தும், கனடாவும் சுண்டெலிகள்எனலாம்.

ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து போட்டியில் யார் வெல்வார்கள் என்று யாரிடமும் கேட்கத் தேவையில்லை. போட்டியின் முடிவை இப்போதேசொல்லி விடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் சிக்கி ஸ்காட்லாந்து எப்படித் திணறும் என்பதைப் பார்க்க ரசிகர்களிடையே பெரும் ஆவல்எழுந்துள்ளது.

அதேசமயம், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா எத்தனை ரன்களைக் குவிக்கப் போகிறது, என்னென்ன சாதனைகள் படைக்கப் போகிறது என்றஎதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதேபோல, ஸ்காட்லாந்து எத்தனை ஓவர் வரை தாக்குப் பிடிக்கும் என்ற பெட்டிங்கும் தொடங்கி விட்டது. 50 ஓவர்கள் வரைத் தாக்குப் பிடித்துஆடினால் அதுவே மிகப் பெரிய சாதனை போலத்தான்.

ரன் மெஷின் ஆன மாத்யூ ஹைடன் இப்போட்டியில் விளையாடுகிறார்.

கடந்த சில போட்டிகளில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முதல் போட்டியே குட்டி அணியுடன் என்பதால் ஹைடன் குவிக்கப் போகும்ரன்களை ஆஸ்திரேலியர்கள் படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அதேபோல அதிரடி மன்னன் கில்கிறைஸ்ட், பான்டிங், மைக்கேல் கிளார்க், ஹூசே ஆகியோரும் ரன்களைக் குவிக்க ஆயத்தமாக உள்ளனர்.

வலு குறைந்த அணி என்பதற்காக ஸ்காட்லாந்தை ரொம்பவும் குறைத்தும் கூறி விட முடியாது. காரணம், கடந்த 1999ம் ஆண்டு உலகக் கோப்பைப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நான்கு விக்கெட்டுகளை ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்கள் பறித்து தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு இது பயிற்சி ஆட்டம் போல இருந்தாலும், ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா:

கேப்டன் - ரிக்கி பான்டிங், ஆடம் கில்கிறைஸ்ட், கிளன் மெக்கிராத், ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், மேத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், பிராட் ஹாக்,மைக்கேல் ஹூசே, நாதன் பிரேக்கன், ஷேன் வாட்சன், ஸ்டூவர்ட் கிளார்க், பிராட் ஹாடின், மிட்சல் ஜான்சன், பிராட் ஹாட்ஜ், ஷான் டெய்ட்

ஸ்காட்லாந்து:

கேப்டன் - கிரேக் ரைட், டோகி பிரவுன், கவின் ஹாமில்டன், ஜான் பிளைன், நீல் மெக்கல்லம், ரியான் வாட்சன், ராஸ் லியான்ஸ், எரேசர் வாட்ஸ்,பால் ஹாப்மேன், காலின் ஸ்மித், மஜீத் ஹக், நவ்தீப் பூனியா, டிவேல்ட் நெல், டக்ளஸ் லோக்கார்ட், கிளன் ரோஜர்ஸ்

இன்னொரு போட்டியில் கனடாவும், கென்யாவும் மோதுகின்றன.

கென்யா சற்றே வலுவான அணி என்பதில் சந்தேகம் இல்லை. இப்போட்டியில் கென்யாவுக்கே வெற்றி வாய்ப்பும் அதிகம் என்பதிலும் சந்தேகம்இல்லை.

கடந்த உலகக் கோப்பைப் போட்டியல் பெரிய அணிகளுக்கு ‘டரியல்‘ கொடுத்த அணி கென்யா. வலுவான இலங்கையை வீழ்த்தி அரை இறுதிக்குமுன்னேறி அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தியது கென்யா. அரைஇறுதியில் அது சந்தித்த அணி இந்தியா.

இலங்கையைப் போல இந்தியாவும் வீழுமா, கென்யா இறுதிக்குப் போய் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நல்லவேளையாகஅதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை, இந்தியா தப்பித்தது.

கென்ய அணியின் கேப்டன் ஸ்டீவ் டிக்கோலா, ஓடோயா, ரவீந்து ஷா உள்ளிட்ட சில விளையாடக் கூடிய வீரர்கள் உள்ளனர். இதனால் 2வதுசுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையுடன் கென்யா உள்ளது.

மாறாக, கனடா அணி படு வீக்கான அணியா காணப்படுகிறது. இந்த அணியில் உள்ள முக்கிய வீரர் ஆண்டர்சன் கம்மின்ஸ். 40 வயதாகும் இவர்ஒருகாலத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்று ஆடியவர்.

தற்போது கனடா அணியில் இடம்பெற்றுள்ளார். இவரை வைத்து கொஞ்சமாவது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்உள்ளது கனடா.

கனடா அணியின் கேப்டன் ஜான் டேவிசன் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து அதிர்ச்சி வைத்தியம்கொடுத்தவர். இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் அசத்த கனடா தயாராக வந்துள்ளது.

இந்தப் போட்டியிலும் ரன் மழை பொழியும் என எதிர்ப்பார்க்கலாம்.

இரு அணி வீரர்கள்:

கென்யா:

கேப்டன் - ஸ்டீபன் டிக்கோலா, தாமஸ் ஓடாயோ, ரவீந்து ஷா, டோனி சுஜி, காலின்ஸ் ஓபுயா, பீட்டர் ஒச்சியாங், டேவிட் ஓபுயா, ஜிம்மிகமாண்டே, தன்மய் மிஸ்ரா, மாரிஸ் ஓமா, நஹமயா ஓதியம்பா, ஹிரேன் வராயா, லேமக் ஓனியாங்கோ, மல்ஹார் படேல், ராஜேஷ் புதியா.

கனடா:

கேப்டன் - ஜான் டேவிசன், ஆண்டர்சன் கம்மின்ஸ், ஆஷிஷ் பகாய், டெஸ்மாண்ட் சம்னி, சுனில் தனிராம், ஹென்றி ஓசிண்டே, அப்துல் சமத்,ஜார்ஜ் காட்ரிங்டன், உமர் பட்டி, கெவின் சந்தர், ஆசிப் முல்லா, குவாசிர் அலி, இயான் பில்கிளிப், ஆஸ்டின் காட்ரிங்டன், ஜெப் பார்னட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+