ஸ்காட்லாந்தை நசுக்கிய ஆஸிதிரேலியா: கென்யாவிடம் கனடா தோல்வி
பாசடெரே (செயின்ட் கீட்ஸ்-நெவிஸ்):செயின்ட் கீட்ஸ் தீவின் பாசடெரே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தைஆஸ்திரேலியா தோற்கடித்தது. மற்றொரு போட்டியில், கென்யாவிடம் கனடா தோல்வியுற்றது.
குட்டி அணியான ஸ்காட்லாந்தும், வலுவான ஆஸ்திரேலியாவும் நேற்று நடந்த ஏ பிரிவு போட்டியில் மோதினர். டாஸ் வென்ற ஸ்காட்லாந்துகேப்டன் ஜான் டேவிசன், முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
அதிரடி வீரர்கள் மாத்யூ ஹெய்டனும், கில்கிறைஸ்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆரம்பத்திலிருந்தே இருவரும் அடித்துஆடினர். அதேசமயம், எதிர்பாராத வகையில் ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் நேர்த்தியாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்துள்ள ஹெய்டன் சிறப்பாக ஆடி 60 ரன்களை எடுத்தார். கில்கிறைஸ்ட் 46 ரன்களில் ஆட்டமிழந்துஅரை சதத்தைத் தவற விட்டார்.
பின்னர் வந்த கேப்டன் ரிக்கி பான்டிங் படு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்காட்லாந்து பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய பான்டிங்சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசித் தள்ளி ஸ்காட்லாந்து அணிக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார்.
93 பந்துகளை மட்டுமே சந்தித்த பான்டிங் அபாரமாக ஆடி 113 ரன்களைக் குவித்தார். இறுதியில் ரைட் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.அவரது சதத்தில் 5 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.
பிராட் ஹாக்கும் தனது பங்குக்கு 40 ரன்களைக் குவித்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 334ரன்களைக் குவித்தது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரைட், பிரவுன், ரோஜர்ஸ் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
தொடவே முடியாத வெற்றி இலக்கை ஸ்காட்லாந்து மட்டையாளர்கள் தைரியமாகவே சந்தித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் மளமளவென சரிந்துகொண்டிருந்த நிலையில் ஸ்மித் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவால் விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 51ரன்களைக் குவித்தார்.
அதற்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோரான 19 ரன்களை பிரவுன் எடுத்தார். வேறு யாரும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. வலுவான அணியானஆஸ்திரேலியாவை 41 ஓவர்கள் வரை சந்தித்து ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தது ஸ்காட்லாந்து.
இறுதியில்40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவியது ஸ்காட்லாந்து.
கேப்டன் ரிக்கி பான்டிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் எடுத்த சதம் மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளில் 1000ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார் பான்டிங். இந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்தான் தற்போது முதலிடத்தில் உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
கென்யா வெற்றி:
செயின்ட் லூஸியாவின் கிராஸ் தீவில் நடந்த இன்னொரு போட்டியில் கென்யா, கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ற கென்ய அணியின் கேப்டன் ஸ்டீவ் டிக்கோலா முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
கென்ய அணியின் பந்துவீச்சை சமாளித்து கனடா வீரர்கள் ஒரளவு சிறப்பாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர் பார்னட் சிறப்பாக ஆடி 41 ரன்களைஎடுத்தார். இதேபோல பில்கிளிப்பும் சுமாராக ஆடி 34 ரன்களைச் சேர்த்தார்.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த கேப்டன் ஜான் டேவிசன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.முல்லா 25 ரன்களும், தனிராம் 34 ரன்களும் சேர்த்து கனடா அணியின் மானத்தை கொஞ்சம் போல காத்தனர்.
கென்ய அணியின் பந்துவீச்சை சமாளித்து 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து ஆடிய கனடா இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199ரன்களை எடுத்தது.
பின்னர் கென்யா தனது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க வீரர் ஓமா 58 ரன்களைக் குவித்தார். கேப்டன் டிக்கோலா சிறப்பாக ஆடி கனடா பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். ஆட்டமிழக்காமல் 72 ரன்களைக் குவித்தார் டிக்கோலா.
இதேபோல மிஸ்ராவும் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 43.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து203 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது கென்யா.
ஆட்ட நாயகனாக டிக்கோலா தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications