பெண் கடத்தல் அதிகரிப்பு: ராமதாஸ் மருமகள்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் ஈவ் டீசிங்கும், பெண்களைக் கடத்தலும் அதிகரித்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளும், மத்திய அமைச்சர் டாக்டர்அன்புமணியின் மனைவியுமான செளம்யா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக சமீப காலமாக பாமக போர்க்கொடி உயர்த்தியுள்ளது. திமுக அரசின் ஒவ்வொரு செயலையும் பாமக நிறுவனர் ராமதாஸ்விமர்சித்து வருகிறார்.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மது விலக்கு தொடர்பாக ராமதாஸ் கருணாநிதிக்கு அறிவுரை கூற, அதற்கு முதல்வர் கருணாநிதியும்படு சூடான பதில் கொடுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அன்புமணியின் மனைவி செளம்யா (இவரது தந்தைதான் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி!) தமிழகத்தில் பெண்களின் நிலைமிகவும் மோசமாகி விட்டதாகவும், பெண்களைக் கடத்துவதும், ஈவ் டீசிங் செய்வதும் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இந்தக் குற்றாச்சாட்டை அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் செளம்யா பேசுகையில், பெண்களிடம் கேலி, கிண்டல் செய்யும் ஈவ் டீசிங் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
அதேபோல பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் செயலும் அதிகரித்து விட்டது. இவற்றைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
தமிழகப் பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராட தயாராக வேண்டும். பள்ளிப் படிப்போடு நின்று விடாமல், மேல் படிப்புபடிக்க பெண்கள் முன்வர வேண்டும். ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்செளம்யா.
செளம்யாவின் இந்தக் குற்றச்சாட்டு, திமுக, பாமக பூசலை மேலும் ஊதிப் பெரிதாக்கும் என்று கருதப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications