இன்றைய மோதல்: ஆஸி.-ஹாலந்து; இங்.-கனடா
பாசட்டெரே:உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாயும், ஹாலந்தும் இன்று மோதுகின்றன. இன்னொரு போட்டியில் இங்கிலாந்தும், கனடாவும்சந்திக்கவுள்ளன.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியிலிருந்து முதல் அணியாக பாகிஸ்தான்வெளியேறியுள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியின் முதல் அதிர்ச்சி இதுதான்.
இந்த நிலையில் இன்றைய போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஹாலந்தையும், இங்கிலாந்து கனடாவையும் எதிர்கொள்கின்றன.
முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஹாலந்துடனான போட்டி அந்த அணிக்கு 2வது போட்டியாகும். இந்தப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அசத்தலாக வெற்றி பெறும்.
இரு அணிகளும் இதற்கு முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு முறை சந்தித்துள்ளன. கடந்த உலகக் கோப்பையில் ஹாலந்தை 75 ரன்கள்வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
இன்றையப் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தும் ஆஸ்திரேலியா என நம்பலாம். அதிரடி வீரர் கில்கிறைஸ்ட் தனது 10 ஆயிரமாவது ரன்னைஇந்தப் போட்டியில் எடுக்கக் காத்துள்ளார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்தும், கனடாவும் மோதுகின்றன. இங்கிலாந்து ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்துஇக்கட்டான நிலையில் உள்ளது. கனடாவும் ஏற்கனவே கென்யாவுடன் மோதி தோற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
இங்கிலாந்தும், கனடாவும் கடந்த 1979ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் மோதியுள்ளன. அப்போட்டியில் 45 ரன்களில் கனடாவைசுருட்டிது இங்கிலாந்து. பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியிலும் கனடாவை துவம்சம் செய்து வெற்றிக் கணக்கைத் தொடங்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.
இன்றை இரு போட்டிகளும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாதவை எனலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications