புலிகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:வவுனியா அருகே நடந்த கடும் சண்டையில் 6 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கொன்றனர். 30க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் குறி வைத்துநடத்தப்படும் இந்தத் தாக்குதலில் உயிர்ச் சேதம் அதிரிகத்து வருகிறது.
கிழக்கில் நடந்து வந்த தாக்குதல் தற்போது வடக்கிலும் வியாபித்து அதிகரித்து வருகிறது. வவுனியா பகுதியில் ராணுவம் புதிய தாக்குதலைதொடங்கியுள்ளது.
இங்குள்ள புலிகளின் முகாம் ஒன்றைப் பிடிக்க ராணுவம் கடும் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு விடுதலைப் புலிகளும் பதிலடியாக தாக்குதல்இறங்கினர். இதில், 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான சண்டை அதிகரித்து வரும் நிலயிைல் இடம் பெயரும் தமிழர்களின் எண்ணிக்கையும்தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் படகு தகர்ப்பு:
இதற்கிடையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் கடத்தி வந்த படகைத் தாக்கித் தகர்த்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கிழக்கிலும், வடக்கிலும் உள்ள விடுதலைப்ப புலிகளின்நிலைகள் மீது இலங்கை பாதுகாப்புப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புலிகளின் ஆயுதப் படகு ஒன்றை தாக்கி அழித்து விட்டதாக கடற்படை கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், நேற்று நள்ளிரவு கிழக்கில் உள்ள அருகம்பே பகுதியிலிருந்து 400 கி.மீ தொலையில் சந்தேகத்திற்கிடமானமுறையில் வந்து கொண்டிருந்த படகை தடுத்து நிறுத்த முயன்றோம்.
ஆனால் அந்த படகில் வந்தவர்கள் படகை நிறுத்தவில்லை. மேலும் எங்கள் மீது பீரங்கித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தப் படகு மீதுகடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் அந்தப் படகு முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விட்டனர்.
அந்தப் படகு விடுதலைப் புலிகளின் படகு, அதில் ஏராளமான ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இந்தப் படகில் 12விடுதலைப்புலிகள் இருந்ததாக சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.
கடந்த மாதம்தான் தோண்ட்ரா முனை பகுதியில், புலிகளின் படகு ஒன்று தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு படகு தகர்க்கப்பட்டுள்ளதாககடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications