பாக். பயிற்சியாளர் உல்மர் திடீர் மரணம்
கிங்ஸ்டன் (ஜமைக்கா):பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 58.
உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் மேற்கிந்திய தீவு நாடான ஜமைக்காவில் தான் தங்கியிருந்த பிகாசஸ் ஹோட்டலில் அவர் மயங்கிய நிலையில்கண்டெடுக்கப்பட்டார்.
![]() |
வாந்தி எடுத்து மூச்சு பேச்சில்லாமல் கிடந்த அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜர் தாலத் அலி, இன்னொரு பயிற்சியாளர் முர்ரேஸ்டீவன்சன், மற்றும் உதவி மேனேஜர் ஆசாத் முஸ்தபா ஆகியோர் உடனடியாக கிங்ஸ்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி, நினைவு திரும்பாமலே உல்மர் உயிரிழந்தார்.
உல்மரின் மரணத்திற்கான காரணம் சரியாக தெரியவில்லை. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உல்மர் 2004ம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்அணியின் பயிற்சியாளராக சேர்ந்தார். அதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்தார். 1975 முதல் 1981 வரை இங்கிலாந்துஅணிக்காக விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தபோதே உல்மருக்கும் சில வீரர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. ஒரு பயிற்சியின்போது உல்மரைசோயிப் அக்தர் தாக்கிய சம்பவமும் நடந்தது. ஆனாலும் பொறுமை காத்து வந்தார் உல்மர். இந் நிலையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்துஅணியிடம் தோற்று உலகக் கோப்பை போட்டிகளை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் பாகிஸ்தான் நாட்டின் முழு கோபமும்உல்மர் பக்கம் திரும்பியது.
![]() |
பாகிஸ்தானுக்கு வந்தால் அவருக்கு வாள்களும் கற்களும் காத்துக் கொண்டிருப்பதாக சில முன்னாள் வீரர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கினர்.இதனால் பெரும் டென்சனில் இருந்தார் உல்மர். இந் நிலையில் தான் அவர் மர்மமான முறையில் பலியாகியுள்ளார்.
ஒரு நாள் போட்டியில் இருந்து இன்சமாம் ஓய்வு:
இதற்கிடையில் பாகிஸ்தானின் கேப்டன் இன்சமாம் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகப் போவாதாக அறிவித்துள்ளார்.
உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய இரண்டுவது லீக் போட்டியில் அயர்லாந்திடம் மோசமாக தேல்வியுற்றதை தொடர்ந்துஇன்சமாம் ஒரு நாள் போட்டியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 377 ஒரு நாள் போட்டிகளிலும் 129 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள இன்சமாம் மொத்தம்11,702 ரன்கள் குவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications