ஆஸ்திரேலியா இமாலய வெற்றி:கனடாவை வீழ்த்திய இங்கிலாந்து!

Subscribe to Oneindia Tamil

கிராஸ் ஐலெட் (செயின்ட் லூஸியா):உலகக் கோப்பை கிரிக்கெட் சி பிரிவு ஆட்டத்தில் கனடாவை, இங்கிலாந்தும், ஹாலந்தை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தின.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி, ஹாலந்தையும், கனடாவை, இங்கிலாந்தும் சந்தித்தன.

கிராஸ் ஐலெட்டில் உள்ள பியூஸ்ஜோயர் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்தும், கனடாவும் மோதின. இங்கிலாந்து வெற்றி பெறும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகம் இல்லை.

முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்ஸ், பால் காலிங்வுட், மைக்கேல் வாகன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.அதிரடியாக ஆடிய ஜாய்ஸ் 66 ரன்களைக் குவித்தார்.

கேப்டன் மைக்கேல் வாகன் 45 ரன்களில் அவுட் ஆனார். இளம் வீரர் பால் காலிங்வுட் சிறப்பாக ஆடி 62 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல்இருந்தார்.

ஆரம்பத்தில் கனடாவின் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தால், இங்கிலாந்தின் ரன் குவிப்பு மந்தமாக இருந்தது. இறுதியில், 50 ஓவர்கள் முடிவில், 6விக்கெட் இழப்புக்கு 279 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. கனடா அணியின் தனிராம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடத் தொடங்கிய கனடா அணி, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைச் சமாளித்து சிறப்பாக ஆடியது. மிக நிதானமாக ரன்களை சேர்த்துவந்தது கனடா. ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை வெல்லக் கூடுமோ என்ற சந்தேகத்தையும் அளித்தது.

அந்த அளவுக்கு நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர் கனடா வீரர்கள். கேப்டன் டேவிடசன் 21 ரன்களை எடுத்தார். பில் கிளிப் 20 ரன்களும்,சமத் 36 ரன்களும், சம்னி ஆட்டமிழக்காமல் 27 ரன்களும், தனிராம் 30 ரன்களும் எடுத்தனர்.

இவர்களை விட முல்லாதான் மிகச் சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து பந்து வீச்சை 50 ஓவர்கள் வரை நின்று சமாளித்து அசத்தியகனடா, இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

பசடேரெவில் நடந்த மற்றொரு போட்டியில், ஹாலந்து அணியை ஆஸ்திரேலியா 229 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபாரமாக வென்றது.

பசடேரெவில் உள்ள வார்னர் பூங்கா மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி வீரர்கில்கிறைஸ்ட் சிறப்பாக ஆடி 5 7 ரன்களைக் குவித்தார். மறு முனையில் மாத்யூ ஹைடன் 29 ரன்களில் வீழ்ந்தார்.

கேப்டன் ரிக்கி பான்டிங் இன்னொரு சதம் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக 23 ரன்களில் பெவிலியன்திரும்பினார் பான்டிங்.

ஆனால் இளம் வீரர் மைக்கேல் கிளார்க்கும், ஹாட்ஜும் அட்டகாசமாக அடி ரன்களைக் குவித்தனர். கிளார்க் 93 ரன்கள் குவித்து கடைசி வரைஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹாட்ஜ் ஆட்டம்தான் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 123 ரன்களைக் குவித்த அவர் 82 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கடந்தபோட்டியில் 99 ரன்களைக் குவித்தவர் ஹாட்ஜ்.

இறுதியில், 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 358 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. ரொம்பக் கஷ்டம் என்ற நிலையில் ஹாலந்து தனதுபேட்டிங்கைத் தொடங்கியது.

ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பாவமாக காணப்பட்டது ஹாலந்து. ரீக்கர்ஸ்மட்டும் கொஞ்சம் சமாளித்து 25 ரன்களைச் சேர்த்தார். இதேபோல, வான் பஞ்ச் 33 ரன்கள் எடுத்தார். பாரன் 24 ரன்கள் சேர்த்தார்.

26.5 ஓவர்களில் ஹாலந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹாலந்து 129 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+