மகாதேவனுக்கு ஜெ. ஆப்பு-தளவாய்க்கு பதவி!
சென்னை:ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. மகாதேவன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அந்தப்பொறுப்பில் மாஜி மந்திரி தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் நெடு நாட்களாய் ஒதுக்கப்பட்டே இருந்தவர் மகாதேவன். ஆனால், சமீபத்தில் மீண்டும் தலையெடுத்தார். அவரை திடீரென ஜெ.பேரவை செயலாளராக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து தினகரன்-மகாதேவன் இடையே அதிகாரப் போட்டி எழுந்தது. இருவரின்ஆதரவாளர்களும் அடித்துக் கொண்டு உருண்டனர்.
ஆனாலும் மகாதேவனையே ஆதரித்தார் ஜெயலலிதா. இதனால் வெறுத்துப் போயிருந்தார் தினகரன். ஆனால், அதிமுக இலக்கணப்படி திடீரெனமகாதேவனை ஒரங்கட்ட ஆரம்பித்தார் ஜெயலலிதா. சமீபத்தில் உண்ணாவிரதம் நடத்தியபோது கூட அந்த இடத்துக்கு மகாதேவன் வரக் கூடாது எனஉத்தரவு போட்டார்.
இதனால் மகாதேவன் தலையில் கத்தி தொங்குவது உறுதியானது. இந் நிலையில் அவரை பதவியை விட்டு தூக்கியதோடு வேறு பதவி ஏதும்கொடுக்காமல் தவிக்க விட்டுள்ளார் ஜெயலலிதா.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் தளவாய்சுந்தரம், ஜெயலலிதா பேரவை செயலாலர் பொறுப்பில் இருக்கும்டி.டி.வி.மகாதேவன், இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராஜ ரத்தினம், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் சக்திவேல்ஆகியோர் இன்று முதல் அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும், அதிமுக ஜெயலலிதா பேரவை பொறுப்பில் முன்னாள் அமைச்சர்தளவாய்சுந்தரம் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அதிமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சின்னசாமி, கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பொறுப்புகளில் இருந்த விடுவிக்கப்படுகிறார்கள்.
கரூர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் செந்தில் பாலாஜி நியமிக்கப்படுகிறார். மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் பொறுப்பில்இருந்து ஆர்.பி.உதயகுமார் விடுவிக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் தினகரன் கை ஓங்கியுள்ளது. மகாதேவனுக்கு மீண்டும் அரசியல் அமாவாசை ஆரம்பித்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications