5 வது இடத்துக்கு சறுக்கினார் டோணி
ஜார்ஜ் டவுன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய வீரர் டோணி, 5வது இடத்துக்குப் பின்னேறியுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியில இந்தியா 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
![]() |
இதுவரை 2 வது இடத்தில் இருந்த இந்திய வீரர் டோணி 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டிராவிட் 12வது இடத்திலும், யுவராஜ்சிங் 17வது இடத்திலும் உள்ளனர். முதல் பத்து இடங்களுக்குள் டோணி மட்டுமே உள்ளார்.
பேட்டிங் வரிசையில், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதல் முறையாக அவர் நம்பர் ஒன் இடத்துக்கு வந்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில், முதல் சுற்று ஆட்டங்களில் இவர் 121 ரன்கள் எடுத்துள்ளார்.
2005ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் மார்க்கஸ் டிரஸ்கோதிக் முதல் இடத்தில் இருந்தார். அதன் பின்னர் இங்கிலாந்துலிருந்து யாரும் முதலிடத்திற்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஹுசே 2வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 4வது இடத்தில் இலங்கையின் சங்ககராவும், 5வது இடத்தில் தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித்தும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்க வீரர் ஷான் போலாக் தொடர்ந்து முதலிடத்தில் ருக்கிறார். 2வது இடத்தில் இலங்கையின் முரளீதரன், நியூசிலாந்து வீரர் ஷான் பாண்ட்டும் உள்ளனர்.
இந்தியாவின் ஹர்பஜன்சிங் 13வது இடத்தில் இருக்கிறார். முதல் பத்து இடங்களில் ஒரு இந்திய பந்து வீச்சாளரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 பேட்ஸ்மென்களில் டோணியைத் தவிர மற்ற அனைவருமே சூப்பர் 8 சுற்றில் விளையாடுகின்றனர் என்பது இந்தியாவுக்கு வந்த இன்னொரு அவமானம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்














Click it and Unblock the Notifications