இலங்கைக்கு கடத்த முயற்சி: பீடி பண்டல்கள்படகு பறிமுதல் - 6 பேர் கைது!
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பீடி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் ஆனது. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கியூ பிரிவு போலீஸார் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம், காரான், தாமரைக்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தாமரைக்குளம் கிராமத்தில் சந்தேகப்படும்படியான ஒரு வேன் வலங்காபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. போலீஸார் மாறு வேடத்தில் அந்த வேனைப் பின்தொடர்ந்தனர்.
வலங்காபுரி வந்ததும் அந்த வேனிலிருந்து பீடிக் கட்டுக்கள் இறக்கப்பட்டன. பின்னர் அங்கு தயாராக இருந்த பைபர் கிளாஸ் படகில் அந்த பீடி பொட்டலக் கட்டுக்கள் ஏற்றப்பட்டன. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர்.
அந்த பீடி பார்சல்களை இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து செல்லத்துரை, சேவியர், ரோசாக், காந்தி, பாஸ்கரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர் இவர்களில் சேவியரும், ரோசாக்கும் இலங்கையைச் சேர்ந்த படகோட்டிகள்.
பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜியா உல் ஹக் என்பவரும் கைதானார். மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பீடி பொட்டலங்கள், படகு, பீடி ஏற்றி வந்த வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications