மதுரை இடைத் தேர்தல்-காங்.கில் போட்டா போட்டிகட்சியினருடன் விஜய்காந்த் ஆலோசனை
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், தேமுதிக கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இத் தொகுதியில் வரும் ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜூன் 8 ஆகும்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி விண்ணப்ப கட்டணம் பெறாமல் நிர்வாகிகளிடம் அவர்களது பயோ-டேட்டாவை விண்ணப்பமாக பெற்று வருகிறது.
மதுரை நகர காஙகிரஸ் தலைவர் தெய்வநாயகம், துணைத் தலைவர் ராஜேந்திரன், மேற்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட பெருமாள், மாநில செயலாளர் காந்தி உள்பட பலர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அதே போல சீட்டை பிடிக்க தேமுதிகவிலும் கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டச் செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் ராமர், வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், அவைத் தலைவர் கவியரசு, துணை செயலாளர் சிவமுத்துக்குமார், நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன், செய்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வழக்கறிஞர் சண்முகராஜன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் 14,000 ஓட்டுக்களை பெற்றார். இந்த முறை காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்த பின் தனது கட்சி வேட்பாளரை அறிவிக்க விஜய்காந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக ஜூன் 5ம் தேதி மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications