கழிப்பறையில் பாரதியார் படம்:தலைவர்கள், தமிழறிஞர்கள் கண்டனம்
சென்னை:மகாகவி பாரதியாரின் படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோட்டல் கழிப்பறையில் வைத்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் திம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் உலகெங்கும் உள்ள தமிழர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
![]() |
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால் என்றுதான் ஆத்திரமும், கவலையும் வருகிறது.
முன்பு திருவள்ளுவர் சிலையை கோணி போட்டு மூடி வைத்து அவமானப்படுத்தினர். இன்று பாரதியை அவமானப்படுத்தியுள்ளனர். இதுபோல கன்னடக் கவி குவெம்புவுக்கு அவமானம் நடந்தால் கர்நாடகத்தார் பொறுத்திருப்பார்களா.
பாரதியை சிறுமைப்படுத்தும் இந்த அநாகரீகச் செயல், திட்டமிட்டு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆண்கள் கழிப்பறையை அடையாளம் காட்ட பாரதி படம்தான் கிடைத்ததா. தேச பக்தர்களாகவும், பாரதமாதாவின் வீரப் புதல்வர்களாகவும் கன்னடர்களையும் சேர்த்தே பாடியவர் மகாகவி பாரதி.
கர்நாடக சட்டமன்றத்தில் பாரதியின் படத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் கழிப்பறையில் படத்தை வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக அந்தப் படத்தை அங்கிருந்து எடுப்பதோடு, இந்த செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில்,
இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது.
இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும்.
இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications