For Daily Alerts
Just In
சோம்நாத் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல்
டெல்லி:லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திருப்பினர்.இன்று காலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ஆர்ஆர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சிம்லாவில் நடந்த சார்க் மாநட்டில் கலந்து கொண்டு டெல்லி திரும்பினர் சாட்டர்ஜி. இட மாற்றத்தலும், தட்ப வெப்ப மாற்றத்தாலும் தான் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Story first published: Tuesday, June 5, 2007, 5:30 [IST]