ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட்: சென்னையில்டிக்கெட் வாங்க ஆளில்லை!!!
சென்னை:சென்னையில் நடைபெறவுள்ள ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை படு மந்தமாக நடந்து வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நம் அணி வாங்கிய அடியை வீரர்கள் ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால் ரசிகர்கள் ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்கப் போவதில்லை. இது எல்லா வகையிலும் பிரதிபலித்து வருகிறது.
ஆப்பிரிக்க லெவன் அணிக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாளை இந்தியாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20-20 போட்டி நடைபெறவுள்ளன.
முதல் ஒருநாள் போட்டி பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஆனால், டிக்கெட் வாங்கத் தான் ஆள் இல்லை. கூவிக் கூவி டிக்கெட் விற்கும் படுமோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் இந்த ரியாக்ஷனை முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ இம்முறை டிக்கெட் விலையை பல மடங்கு குறைத்துத் தான் வைத்துள்ளனர். ஆனாலும் டிக்கெட்களை விற்க முடியவில்லை.
முன்பெல்லாம் டிக்கெட் கவுண்டர்களை இரவே ரசிகர்கள் முற்றுகையிட்டு அங்கேயே நின்றபடி தூங்குவார்கள். கவுண்டர் திறந்த ஒரு மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் கூறுகையில்,
பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியை பார்த்த பின் ரசிகர்களின் ஆர்வம் அதிகாரிக்கும். ஆசிய அணியில் சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடததும் (சச்சின் விளையாடிட்டாலும்...!!!) டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இத் தொடருக்காக கட்டணத்தை குறைத்துள்ளோம். காலரிக்கு ரூ. 300 தான் நிர்ணயித்துள்ளோம். அதே போல பல்வேறு டிக்கெட்டுகளும் குறைக்ப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.5,000 தான் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications