சென்னையில் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கேரள அரசு
சென்னை:சென்னை கிரீம்ஸ் சாலையில் கேரள அரசு, நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகே கேரள அரசுக்குச் சொந்தமாக 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறை இந்த ஹோட்டலைக் கட்டுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதற்காக கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்னைக்கு வந்தார். கேரளா இல்லம் என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல்லை அச்சுதானந்தன் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனும் கலந்து கொண்டார்.
மலையாளிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு
இதற்கிடையே, இங்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கு தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவிலிருந்து சென்னைக்கு வரும் மலையாளிகள் தங்கிச் செல்ல வசதியாகவும், ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான தகவல்களைத் தரும் மையமமாகும் ஒரு வளாகத்தை இங்கு ஏற்படுத்த வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரி வந்தது.
ஆனால் இந்தக் கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டு ஸ்டார் ஹோட்டலைக் கட்ட முடிவெடுத்தது. இதனால் கடுப்பான மலையாளிகள் கூட்டமைப்பு, சென்னையில் அச்சுதானந்தன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications