பறக்கத் தயாராகும் அட்லாண்டிஸ்-கவுண்ட்டவுன் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கேப் கனவரேல் (புளோரிடா):
அட்லான்டிஸ் விண்கலம் விண்ணில் செல்வதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
![]() |
அட்லாண்டிஸ் விண்கலத்தை மார்ச் மாதமே செலுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், விண்கலத்தின் எரிபொருள் டேங்க் சேதமடைந்தது. இதையடுத்து அட்லாண்டிஸை ஏவுவது தடைபட்டது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அட்லாண்டிஸை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அட்லாண்டிஸ் விண்ணில் ஏவப்படவுள்ளது.
11 நாட்கள் விண்ணில் இருக்கும் அட்லாண்டிஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாக ஒரு சூரிய சக்தி தகடைப் பொருத்தவுள்ளது. மேலும், பழைய சூரிய சக்தி தகடு அகற்றப்பட்டு வேறு இடத்தில் பொருத்தப்படவுள்ளது.
அட்லாண்டிஸ் பூமிக்குத் திரும்பும்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கம் சுனிதா வில்லியம்ஸ், பூமிக்குத் திரும்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்ககது.













Click it and Unblock the Notifications