சிவாஜி போஸ்டர்களுக்கு மதுரையில் தடை
மதுரை:இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட சுவரொட்டிகளை ஒட்ட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் நடவடிககையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி ஜூன் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி மதுரை நகர் முழுவதும் சிவாஜி பட சுவரொட்டிகள், கட் அவுட்கள் தூள் பறக்கின்றன.
இந்த நிலையில் இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள் சிவாஜி பட சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொகுதிக்குள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
சிவாஜி சுவரொட்டிகளை அப்புறப்படுத்தக் கூடாது, அனுமதிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் பார்வையாளரான அஜய் தியாகியிடம் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அதற்கு அஜய் தியாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசுகையில், கோபப்படாதீங்க, நானும் ரஜினி ரசிகர்தான். அங்கு இங்கு மட்டுமல்ல,உலகின் பல பகுதிகளிலும் ரசிகர்கள், மன்றங்கள் உள்ளன.எனவே சிவாஜிக்கு எதிராக நான் செயல்படவில்லை. ஆனால்,தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள், சுவெராட்டிகள் ஒட்டக் கூடாது. அதனால்தான் அகற்றினோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications