எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் மதிப்பு என்ன?
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிக்கவுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். அதுகுறித்த ஒரு புள்ளி விவரத் தகவல்.
எம்.எல்.ஏக்களில், நாட்டிலேயே அதிக ஓட்டு மதிப்பு உள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். இங்கு ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 208 ஆகும். உ.பியில் மொத்தம் 403 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே உ.பி. மாநில எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு 83 ஆயிரத்து 824 ஆகும்.
சிக்கிம் மாநில எம்.எல்.ஏக்களின் ஓட்டுக்குத்தான் மதிப்பு குறைவு. அங்கு ஒரு ஓட்டின் மதிப்பு 7 மட்டுமே. மொத்தம் 224 ஓட்டுக்கள்தான் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 176 ஆகும். மொத்த ஓட்டு மதிப்பு 41,184 ஆகும்.
ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். மக்களவையில் 543 எம்.பிக்களும், ராஜ்யசபாவில் 233 எம்.பிக்களும் உள்ளனர். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும்.












Click it and Unblock the Notifications