உலகின் காஸ்ட்லி நகரங்களின் வரிசையில்சென்னை-பெங்களூரை முந்தியது
சென்னை:உலக அளவில் மிகுந்த செலவான நகரங்களில் சென்னைக்கு 133வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் மாஸ்கோவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
உலக அளவில் அதிக செலவான நகரங்களின் பட்டியலை மெர்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6 கண்டங்களில் உள்ள 143 நகரங்கள் இந்த பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டு தரம் பிரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மெர்சருக்காக இந்த ஆய்வை நடத்தியது.
வீட்டு வசதி, போக்குவரத்து, உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அளவுகோல்களை அடிப்படையாக வைத்து செலவு மிக்க நகரம் எது என்பது பகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி உலகிலேயே அதிக செலவு மிகுந்த நகரமாக மாஸ்கோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் மொத்தம் 8 நகரங்கள்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சியோல் நகரத்திற்கு உலக அளவில் 3வது செலவு மிகுந்த நகரம் என்ற பெருமை கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த நான்கு நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் மும்பை முதலிடத்தை (உலக அளவில் 52வது இடம்) பெற்றுள்ளது. 2வது இடம் டெல்லிக்கு போகிறது (உலக அளவில் 68). 3வது இடத்தில் சென்னை உள்ளது.
சென்னைக்கு உலக அளவில் 133வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் விசேஷமான ஒரு அம்சம் என்னவென்றால் பெங்களூரை விட காஸ்ட்லியான நகரம் சென்னை என்பதுதான். பெங்களூருக்கு 134வது இடம் கிடைத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி, ரியல் எஸ்டேட், அதிகரித்து வரும் வருவாய் உள்ளிட்ட பல அம்சங்கள்தான் சென்னை நகரை காஸ்ட்லி நகராக உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவிலேயே சென்னைதான் அதிக முதலீடுகளைக் கவரும் நகரமாக சமீப காலமாக மாறி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 8 மிகப் பெரிய நிறுவனங்கள் (பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட) சென்னையில் ரூ. 6985 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னணு மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக சென்னை மாறியுள்ளது. இதுதவிர பல கோடி மதிப்பிலான வீட்டு வசதித் திட்டங்களும் சென்னை நகரில் குவிந்துள்ளன.
இப்படி பல்வேறு வகையிலும் படு வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரம், உலகின் காஸ்ட்லி நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதில், ஆச்சரியம் இல்லைதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications