சுனிதா விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய் ..
Subscribe to Oneindia Tamil
சென்னை:சுனிதா வில்லியம்ஸ் விண்ணிலிருந்து இனிதாக பூமிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கவிதை வடிவில் கூறியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் குறித்து முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:
விண்கலத்தில் சென்றுள்ள சுனிதா
விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய்
என்று, மண் மீது சில பெண்கள்
கண் மூடிக் கொள்கை யாலே
வளர்க்கின்றார் யாகம், அஞ்ஞானம்
அங்கே வானில் சிரிக்கின்றார்
அக்கலத்தை பழுது பார்ப்போர், அது விஞ்ஞானம்!












Click it and Unblock the Notifications