கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறும் டோணி பிளேர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் டோணி பிளேர், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார். இதற்காக போப்பாண்டவரை சந்தித்து கத்தோலிக்கராக மாறத் திட்டமிட்டுள்ளார்.
![]() |
டோணி பிளேர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த நிலையில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவுக்கு மாற அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக வாட்டிகன் சென்று போப்பாண்டவரை சந்தித்து அவர் முன்னிலையில் கத்தோலிக்கராக மாறவுள்ளார்.
அடுத்த புதன்கிழமை பிளேர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார். நிதித்துறை அமைச்சர் கார்டன் பிரவுன் புதிய பிரமதராக பதவியேற்கவுள்ளார்.
பிளேரின் மதப் பிரிவு மாற்றம் குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரோம் நகருக்கு நாளை பிளேர் செல்கிறார். பின்னர் போப்பாண்டவரைச் சந்தித்து மாற்றம் குறித்து அவரிடம் விவாதிக்கிறார். பின்னர் மாற்றம் நடைபெறும் என்றார்.
பிளேரின் மனைவி செர்ரி மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications