கலைஞர் மகுடத்தில் வைரக் கல்: வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரை இடைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, கலைஞர் ஆட்சியின் கீரிடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மதுரை இடைத் தேர்தலை எடைத் தேர்தலாகவே கருதலாம். மதுரையில் வாக்காளர்கள் எவ்வளவு கெடுபிடிகள், அதிரடிகளைத் தாண்டி நியாயத் தராசினை பிடித்து தங்களின் பேராதரவு கலைஞர் ஆட்சிக்கே என்பதை காட்டியுள்ளனர்.
மதுரை வாக்காளர்களுக்கு திராவிடர் கழகம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த வெற்றி கலைஞர் ஆட்சியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல் என்றார்.












Click it and Unblock the Notifications