கருணாநிதியுடன் ராஜேந்திரன் சந்திப்பு:அழகிரியும் உடனிருந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அழகிரியும் உடன் இருந்தார்.
இன்று காலை அண்ணா அறிவாலயததில் கருணாநிதியை அவர் சந்தித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சுதர்சனமும் உடன் சென்றனர்.
அப்போது, கருணாநிதிக்கும் அழகிரிக்கும் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியில் அழகிரியின் பங்கு மிக மிக அதிகம் என ராஜேந்திரன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சனம், இந்த வெற்றியை ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான் இல்லாத காரணங்களைச் சொல்லி தனது தோல்வியை சமாளிக்கிறார்.
தேர்தல் ஆணையமும் கூட ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications