இந்திய அமெரிக்க விஞ்ஞானிக்கு ஒட்டோ ஸ்காட் விருது
நியூயார்க்:இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானியான ஹிமான்சு ஜெயினுக்கு கண்ணாடி தொடர்பான ஆராய்ச்சிக்கு பிரைட்ரிச் ஒட்டோ ஸ்காட் விருது கிடைத்துள்ளது.
தற்போது லேஹ் பல்கலைக் கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜீனியரிங் பேராசிரியாக பணியாற்றும் ஹிமான்சு ஜெயின், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்தில் படகு பயணம் செய்தபோது நூற்றுக்கணக்கான ஜெல்லி மீன்களை கண்டார். கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இந்த ஜெல்லி மீன்கள் நகர்வது கண்ணாடியில் அணுக்கள் நகர்வதை போல் இருப்பதை பார்த்தார்.
![]() |
பின்னர் பரிசோதனை கூடத்தில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் கண்ணாடிகளை ஆராய்ந்தார். கண்ணாடிகளிலுள்ள அணுக்கள் 4 டிகிரி மற்றும் 0 டிகிரியில் அசைவதை கண்டார். அவை ஜெல்லி மீன்கள் அசைவதை போல் இருந்தது.
இதன் மூலம் திடப் பொருட்களில் ஜெல்லி மீன்களை போல் அசையும் அணுக்கள் என்ற தலைப்புடன் தன் ஆராய்ச்சி முடிவை சமர்ப்பித்தார்.
ஹிமான்சுவின் இந்த ஆராய்ச்சிக்காக, இந்த ஆண்டிற்கான ஒட்டோ ஸ்காட் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 1851ம் ஆண்டு முதல் 1935 வரை வாழ்ந்த விஞ்ஞானி பிரைட்ரிச் ஒட்டோ ஸ்காட் என்பவரின் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் செராமிக்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ள ஜெயின் ஜெர்மனியிலுள்ள டார்ட் மண்ட பல்கலைக் கழகத்திலும் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications