ஜெயலலிதா டெல்லி சென்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நாளை பிற்பகல் டெல்லியில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடக்கிறது (யாருக்கு ஓட்டு என இந்தக் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை)
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் ஷெகாவத்திற்கு ஆதரவளிக்குமாறு 3வது அணியினரிடம் பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக ஜெயலலிதா, வைகோவை ஜஸ்வந்த் சந்தித்து விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications