கருணாநிதி 1 வார காலம் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதி அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.
திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளனர். அதே வாரத்தில் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவும் நடைபெறும்.
இதுதவிர மாநிலங்களுக்கிடையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டமும் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.
24ம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர் டெல்லியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications