கொடைகானல்-சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து4 மாணவிகள் உள்பட 8 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:கீழக்கரையில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்து கொடைக்கானல் மலையில் பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் 4 மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள், ஆசிரியர்கள் கொடைக்கானலக்கு சுற்றுலா சென்றனர்.
மலையின் காட் ரோட்டில் இன்று காலை பஸ் ஏறிக் கொண்டிருந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். ஒரு குறுகிய திருப்பதில் அந்த பஸ் கவிழ்ந்து, பள்ளத்தில் விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 4 மாணவிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications