சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்.
![]() |
ஹைதராபாத்தில் வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை வரை சர்வதேச விண்வெளி மாநாடு நடக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான (ஐ.எஸ்.ஆர்.ஓ)இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் உலகம் முழுவதும் இருந்தும் 2,000க்கும் மேற்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 6 மாதங்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்துவிட்டு சமீபத்தில் தான் அவர் பூமிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications