கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ததற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இன்று காலை இச் சந்திப்பு நடந்தது. பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறுகையில்,
கலைஞர் அவர்களை சந்தித்து வன்முறையோடு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தேன். இந்த மறுதேர்தலின் மூலம் நடைபெற்ற வன்முறைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications