காமராஜர் பிறந்த நாள்: ஞாயிற்றுக்கிழமைஅனைத்து பள்ளிகள் இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாளை காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கர்ம வீரர், கல்வி கண் கொடுத்த காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதியான நாளை(ஞாயிறு) தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
நாளை அனைத்து கல்விகளிலும் ஆடல், பாடல் நடன இசை, ஓவியம் என பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications