சொத்துக் கணக்கை வெளியிட்ட ஷெகாவத்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத் தனது சொத்துக்கணக்கை வெளியிட்டு பிரதீபா பாட்டீலுக்கு புது நெருக்கடியைக் கொடுத்துள்ளார்.

நமது நாட்டு தேர்தல் சட்டப்படி எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவோர் மட்டுமே சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கைக் காட்டத் தேவையில்லை.

ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோரும் தங்களது சொத்துக்கணக்கைக் காட்ட வேண்டும் என பாஜக கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியின் ஆதரவோடு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஷெகாவத் தனது சொத்துக் கணக்கை நேற்று வெளியிட்டு புதிய பரபரப்பையும், பிரதீபா பாட்டீலுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

ஷெகாவத் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வரும் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் சொத்துக் கணக்கை வெளியிட்டார். அதன்படி ஷெகாவத்துக்கு ரூ. 27.50 லட்சம் சொத்தும், அவரது மனைவிக்கு ரூ. 2.5 கோடி சொத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெகாவத்தின் வங்கிக் கணக்கில் ரூ. 25 லட்சத்து 60 ஆயிரம் உள்ளது. கையில் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை வைத்துள்ளார். தங்க நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். பழைய ராணுவ ஜீப் மட்டுமே ஷெகாவத்திடம் உள்ள வாகனம்.

இதுதவிர ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ஷெகாவத்தின் மூதாதையர் சொத்திலிருந்து 0.99 ஹெக்டேர் நிலம் ஷெகாவத்துக்கு கிடைத்துள்ளதாம். அவரது மூதாதையர் வீட்டிலிருந்து 16ல் ஒரு பங்கு பகுதி அவருக்குக் கிடைத்துள்ளதாம்.

ஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வரின் பெயரில் ரூ. 2.5 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த விருப்பத்தின் பேரில் ஷெகாவத் தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தனது சொத்துக் கணக்கை அவர் வெளியிட்டுள்ளார்.

இதேபோல பிரதீபா பாட்டீலும் வெளியிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, கட்டாயப்படுத்தவில்லை. அது அவரது விருப்பம் என்று கூறினார் சுஷ்மா சுவராஜ்.

ஷெகாவத்தின் செயல் வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+