தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!!
ஈரோடு:பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள்.
ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது.
ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார்.
தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர்.
சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மகன்களிடமும், இந்த கிழவியை தூரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விடுங்கள், இவள் திரும்பி வீட்டைத் தேடி வந்துவிடக் கூடாது எனவும் சொல்லியுள்ளார்.
சரசாவின் இரு மகன்களும் தங்கள் பாட்டியை மோட்டார் பைக்கில் முரட்டுத்தனமாக அமர வைத்து ஈரோடு நகருக்குள் ஒரு குப்பைத் தொட்டி அருகே போட்டு விட்டுச் சென்றுவிட்டனராம்.
குப்பையில் கிடந்த சின்னம்மாளை மோகனசுந்தரி என்பவர் தன் வீட்டுக்கு அழைத்து போய் சாப்பாடு கொடுத்துள்ளார். மிகவும் அசுத்தமாக இருந்த அவரை அந்த பெண் சுத்தம் செய்து வேண்டிய உதவிகளை செய்தார்.
சிறிது தெம்பு வந்தபிறகு அவரிடம் சின்னம்மாள் தான் எப்படி குப்பைக்கு வந்தேன் என்பதை விளக்கமாகவும் பயத்துடனும் சொல்லியுள்ளார்.
இதையடுத்து மோகனசுந்தரி அவரை தனது தந்தை வைத்து நடத்தும் ஜெயபாரத் சமூக சேவை அமைப்பில் தங்க வைத்துள்ளா. ஆனால் சின்னம்மாள் திரும்பி தன் மகள்களிடம் செல்ல விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பினர் 3 நாட்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்து பின்னர் சமூக நல அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களிடம் ஜெயபாரத் சமூகசே வை அமைப்பினர் சின்னம்மாளுக்கு நடந்த அவலத்தை விளக்கினர். அதிர்ச்சியடைந்த சமூக மேம்பாட்டுத் துறையினர் மூதாட்டியை என்.எல்.கருணை இல்லத்துக்கு மாற்றியுள்ளனர்.
சின்னம்மாளை குப்பையில் விட்டுச் சென்ற அவரது மகள்கள் சரசா உட்பட 3பேரின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சமூக நலத்துறையினர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், ஈரோடு மாவட்ட போலீஸார் சின்னம்மாளின் மகள்களை கைது செய்ய விசாரணை நடத்தியபோது அவர்கள் விலாசத்தை தெரிவிக்க மறுத்துவிட்டாராம்.
இது தான் தாய்ப் பாசம் என்பதோ?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications