பிரதீபா வெற்றி-நாட்டின் முதல் பெண்ஜனாதிபதியாகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் 88.5 சதவீத எம்.பிக்களும், 91 சதவீத எம்.எல்.ஏக்களும் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரியான பி.டி.ஆச்சார்யா கூறியுள்ளார்.

13வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

படு விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற விவரத்தை தேர்தல் முடிந்த பின்னர் தேரத்ல் அதிகாரியான பி.டி.ஆச்சார்யா தெரிவித்தார்.

அதன்படி 88.5 சதவீத எம்.பிக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். 91 சதவீத எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 776 எம்.பிக்களில் 682 பேரும், 4120 எம்.எல்.ஏக்களில் 3755 பேரும் வாக்களித்துள்ளனர்.

புதுச்சேரி, சட்டீஸ்கர், குஜராத், கோவா, சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத வாக்குப் பதிவு இருந்தது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏக்களில் 231 பேர் வாக்களித்துள்ளனர். சென்னையில் ஓட்டுப் போட அனுமதி கேட்டிருந்த 7 எம்.பிக்களில் 6 பேர் வாக்களித்தனர். எம்.ஏ.எம். ராமசாமி மட்டும் வாக்களிக்கவில்லை.

ஜெயலலிதா, மதிமுகவின் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் வாக்களிக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் பிறரின் உதவியுடன் கைத்தாங்கலாக தூக்கி வரப்பட்டு வாக்களித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+