தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் சோதனை
சென்னை:கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சமீபத்தில் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனைக் குழுக்களில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரம், தினசரி வரவு செலவுக் கணக்கு, மாணவர் சேர்க்கைக் கட்டண ரசீது, அடிப்படைக் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மதுரை, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
தேவைப்பட்டால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications