மெக்சிகோவில் இன்போசிஸின் பி.பி.ஓ.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:அமெரிக்காவில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெக்சிகோவில் பிபிஓ சேவையை ஆரம்பிக்க இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கர்நாடகத்தின் சிறந்த ஐடி ஏற்றுமதியாளர் என்ற விருது பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,

லத்தின் அமெரிக்காவில் இன்போசிஸ் முதல் முறையாக காலெடுத்து வைக்கிறது. 200 பேர் பணியாற்றக் கூடிய வகையில் இந்த பிபிஓ இருக்கும்.

மான்டெர்ரி நகரில் எங்களது நிறுவனத்திற்கு சொந்தமாக அங்கு இடம் உள்ளது. அந்த இடத்திலேயே இந்த பிபிஓ அலுவலகம் செயல்படும்.

இப்போதைக்கு பிபிஓ சேவையில் மட்டும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். போகப் போக மற்ற சேவைகளையும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்போம்.

இதேபோன்ற பிபிஓ சேவையை பிற நாடுகளிலும் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

அமெரிக்காவுக்கு மிக அருகில் இருக்கிறது மெக்சிகோ.

மேலும் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் ஒரே நேர முறையே இருக்கிறது. எனவேதான் மெக்சிகோவை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

இன்போசிஸ் நிறுவனத்தில் 65 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். உள்ளூர் நபர்களை அதிக அளவில் பணியமர்த்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இந்தியாவின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இன்போசிஸ் விளங்குகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ். நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+