வாஷிங்டனின் கடும் வெயில்!
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த ஆண்டு வெப்பம் தகதகத்து வருகிறது. வழக்கத்தைவிட 7 டிகிரி வரை அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
வாஷிங்டனில் கடந்த 77 ஆண்டுகளில் நேற்று தான் மிக அதிகமான வெப்ப நிலை நிலவியது. அங்கு 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
![]() |
வழக்கமாக இந்த மாதத்தில் 88 டிகிரி பாரன்ஹீட் தான் வெப்ப நிலை இருக்கும். ஆனால், இந்த முறை கடும் வெப்பம் நிலவுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் 101 டிகிரி வெப்பம் பதிவானது தான் ரெக்கார்டாக இருந்து வந்தது. ஆனால், நேற்று அந்த ரெக்கார்டை வெப்பநிலை முறியடித்துவிட்டது.
கடும் வெப்பத்தால் வாஷிங்டனில் மெட்ரோ ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதிக வெப்பத்தால் ரயில் தண்டவாளங்களின் அமைப்பு மாறலாம் என்பதால் ரயில்களின் வேகத்தை அதிகாரிகள் குறைத்தனர்.
சில அலுவலகளில் ஊழியர்களின் வருகையும் குறைவாக இருந்தது.
இதே நிலை தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது. அங்கும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப நிலை நிலவுவதால், கடற்கரைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவின் சில பகுதிகளில் திடீர் கன மழையும் பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையில் நியூயார்க் சுரங்க ரயில் பாதையில் வெள்ளம் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications