வாஜ்பாய் வீடு திரும்பினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உடல் நலக்குறைவினால் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
![]() |
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு கடந்த 21ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் சென்று பார்த்தனர். சிகிச்சையைத் தொடர்ந்து வாஜ்பாய் உடல் நலம் தேறினார். இந்த நிலையில் அவரது நடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இன்னும் சில நாட்கள் வீட்டிலேயே தங்கி வாஜ்பாய் ஓய்வெடுப்பார். அதன் பின்னரே பிற பணிகளில் அவர் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications