நடிகை ரோஜாவுக்கு புதுப் பதவி!

Subscribe to Oneindia Tamil


சித்தூர்: தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவி பதவி நடிகை ரோஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Roja

தமிழிலும், தெலுங்கிலும் நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர் ரோஜா. 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது கணவர், குழந்தைகளுடன் செட்டிலாகி விட்ட ரோஜா, ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.

அந்தக் கட்சியின் சார்பில் நகரி தொகுதி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நகரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சிப் பொறுப்பாளராக அவர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது மாநில மகளிர் அணி அமைப்பாளராக ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+