பின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்br/அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
பாக்தாத்:
அமெரிக்கா பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம். ஆனால் இளம் முஸ்லீம்கள் சிலரை வைத்து அமெரிக்காவை நாங்கள் நிர்மூலமாக்குவோம் என்று அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நாளையுடன் ஐந்து
ஆண்டுகள் முடிவடைகின்றன. இதையொட்டி நேற்று பின் லேடனின் பேச்சு அடங்கிய புதிய வீடியோவை அல் கொய்தா அமைப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் கடுமையாக நடந்து கொண்டுள்ள நிலையில் பின் லேடனின் புத்தம் புதிய தோற்றத்துடன் கூடிய இந்த வீடியோவை அல் ஜசீரா டிவி ஒளிபரப்பியுள்ளது.
நீண்ட தாடியுடன் காணப்படும் லேடன் இதில் டிரிம் செய்யப்பட்டு, கருப்பு டை அடிக்கப்பட்ட தாடியுடன் படு பளிச்சென காணப்படுகிறார். அரபு நாட்டு உடையில் இருக்கும் லேடன், சில வயது குறைந்தது போன்ற புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்.
அரை மணி நேரம் லேடன் பேசியுள்ளார். அதில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம். உலகின் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டிருக்கலாம். உலகையே தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்ற நாடாக இருக்கலாம்.
ஆனால் 19 இளம் முஸ்லீம்களை வைத்து நாங்கள் உங்களை பயமுறுத்தினோம் (இரட்டை கோபுர தாக்குதல்). உலகில் உள்ள இளம் முஸ்லீம்களே, அமெரிக்கா மீதும் பிற மேற்கத்திய நாடுகள் மீதும் தொடர்ந்து கடும் தாக்குதலை தொடருங்கள்.
அமெரிக்கர்கள் தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் முதல் முறை அதிபர் ஆன பின்னர் அவர் செய்த தவறுகளை நீங்கள் அனுமதித்தீர்கள். தவறு செய்த அவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்து இன்னும் பெரிய தவறை செய்துள்ளீர்கள்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர் செய்த படுகொலைகளுக்கு நீங்கள் முழு ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும், உங்கள் உயிரை காத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள் என்று கூறியுள்ளார் லேடன்.
லேடனின் வீடியோவில் குறிப்பிடத்தக்க எந்த தாக்குதல் மிரட்டலும் இல்லை. இந்த வீடியோ சமீபத்தில்தான் எடுக்கப்பட்டதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லேடன் பேச்சு அடங்கிய வீடியோ படத்தின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications