கட்டாய கிராம மருத்துவ சேவை;br/மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
சென்னை:
கட்டாய கிராமப்புற சேவை குறித்து மறு பரிசீலனை செய்வதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தங்களதை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஒரு வருடத்திற்கு கட்டாயம் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி அறிவித்தார்.
இதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, சரத்குமாரின் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில மாற்று யோசனைகளையும் இந்தத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன், அமைச்சர் அன்புமணி கடந்த 8ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மருத்துவப் படிப்பை தற்போது உள்ள ஐந்தரை ஆண்டு காலம் என்பதிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவற்கும், கட்டாய கிராமப்புற சேவைத் திட்டத்திற்கும் மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
கட்டாய கிராமப்புற சேவைத் திட்டத்தால் கிட்டத்தட்ட 40,000 டாக்டர் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
எங்களுக்கு நிரந்தர வேலைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் கிராமப்புறங்களில் சேவை செய்யத் தயார் என்றும் மாணவர்கள் சார்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அப்போது அன்புமணி மாணவர்களிடம் உத்தரவாதம் அளித்தார். இதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அன்புமணியின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications