தென் மாவட்ட என்ஜீனியரிங் கல்லூரிகளில் புதிய ஆய்வுப் படிப்புகள் - துணைவேந்தர்
திருநெல்வேலி:
தென் மாவட்ட என்ஜீனியரிங் கல்லூரிகளில் விரைவில் பல்வேறு பிரிவுகளில் புதிய ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்படும் என நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பன் கூறியுள்ளார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக எஸ்.காளியப்பன் நேற்று பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தென் மாவட்டங்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வகை செய்யப்படும்.
புதிதாக சுற்றுசூழல், கடல்இயல், கனிமவளம், மரபுசாரா எரிசக்தி ஆகிய பிரிவுகளில் ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்படும்.
இதன் முலம் இப்பகுதியில் ஏற்படும் கடல் மாற்றங்கள், சுனாமி, மீன்வளம், சுற்றுசூழல் காரணமாக ஏற்படும் மாற்றங்கள், கனிம வளத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள முடியும்.
மேலும் பொதுமக்களுக்கும், கடல், கனிம தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இது உதவும்.
சுயநிதி கல்லூரிகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது, மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் மற்றும் விடுதிகளில் வசதிகள், லேப் வசதிகள் ஆகியவை குறைவாக இருப்பது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது போன்ற குற்றசாட்டுகள் அதிகளவில் உள்ளன.
இவ்வாறு நடந்து கொள்ளும் கல்லூரிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications