கண்ணகி சிலை அருகே விபத்து - 2 பேர் பலி
சென்னை:
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் கண்ணகி சிலை அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தனியார் கார் வாடகை நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றும் சத்யராஜ் (35) என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெருமாள், சதீஷ், நவீன் மற்றும் 3 பேருடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
அவர்களது கார் கடற்கரை காமராஜர் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணகி சிலை அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது எதிரே வந்து கொண்டிருந்த இரும்புப் பொருட்களை ஏற்றி வந்த லாரி மீது கார் மோதியது.
இதில் காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சத்யராஜ், டிரைவர் பிரேம்நாத் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!