கடற்படை தாக்குதலில் 3 அகதிகள் பரிதாப சாவு
கொழும்பு:
இலங்கை கடற்பகுதியில் தமிழகத்திற்கு படகில் தப்பி வந்த அகதிகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
மன்னார் மாவட்டம் நாச்சிகுடா அருகே நேற்று அதிகாலை 4-30 மணியளவில் அகதிகள் குடும்பத்தோடு படகில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அப்பாவி அகதிகளின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படகில் இருந்த ஜெபமாலை ஜேசுதாசன் (55), மேரி மிலாக்சனி மேக்சிமஸ்(15) மற்றும் திலாக்சன் மேக்சிமஸ் (11) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும் படகில் வந்த புஷ்பமலர் மேக்சிமஸ் (35), அவரின் மகன் மிலாக்சன்(10), மகள் மிதுசினி (8) ஆகியோர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து 5 மணி நேரத்திற்கு பிறகு நினைவிழந்து மன்னாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் புஷ்பமலரின் தந்தையும், இரு மகள்களும் ஆவர்.
நாச்சிகுடா விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்ததாகும்.
சண்டையில் 34 புலிகள் பலி?:
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சண்டையில் 34 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவர்கள் புலிகளா அல்லது அப்பாவி மக்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வன்னிப் பகுதியில் பாதுகாப்பு தடுப்புப் பகுதியைத் தாண்டி விடுதலைப் புலிகள் முன்னேற முயன்றபோது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 14 விடுதலைப் புலிகள் பலியானதாக பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 6 ராணுவத்தினர் காயமடைந்தனர்.
வடக்கில் நடந்த இன்னொரு சண்டையில் 14 விடுதலைப் புலிகள் பலியானார்கள்.
இதேபோல மன்னார் மாவட்டத்தில் கடல் பகுதியில் கடல் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே நடந்த மோதலில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இவர்கள் புலிகளா அல்லது அப்பாவி மக்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஓமந்தை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடங்களில் புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications