தொப்பி வீசிய அதிமுக எம்எல்ஏ போஸ் சஸ்பெண்ட்
சென்னை:
சட்டசபையில் சபாநாயகர் மீது தொப்பியை வீசி அவதூறாக நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ போஸ் அடுத்த சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கால கட்டத்தில் அவருக்கு சட்டசபை உறுப்பினருக்குரிய சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் மீது கொலைக் குற்றச்சாட்டு கூறிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றியபோது சில எம்எல்ஏக்கள் காவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு எம்எல்ஏ அவைக் காவலர் அம்சராஜா என்பவரின் தொப்பியைப் பறித்து சபாநாயகர் மீது வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கும்பலோடு கும்பலாக இந்தச் செயலை செய்ததால் தொப்பி வீசிய ஏம்எல்ஏ யார் என்பது தெளிவாகாமல் இருந்தது.
இந் நிலையில் தொப்பியை வீசியது மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ போஸ் என்று தெரியவந்தது. இவர் தீவிர சசிகலா ஆதரவாளர் ஆவார்.
போஸின் இந்த செயல் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று தனது முடிவை தெரிவிப்பதாக சபாநாயகர்அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சட்டசபையில் தனது தீர்ப்பை சபாநாயகர் அறிவித்தார். அதிமுக உறுப்பினர் போஸ், அடுத்த சட்டசபைத் தொடரின் முதல் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏவுக்குரிய சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications