கோவையில் அடுக்கு மாடி வீடுகள் இடிந்து பலர் பலி
உக்கடம்: கோவை உக்கடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள, 35 ஆண்டு பழமையான வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர்கள் இன்று காலை முதல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அந்த குடியிருப்பில் மொத்தம் 25 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு ஏற்கனவே அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் குடியிருப்பாளர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் குடியிருப்பவர்களை வெளியேற்றி வந்த நிலையில் இன்று மாலை திடீரென அந்த கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பேர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கத் தொடங்கினர். இரவு எட்டரை மணி வரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் சாவு எண்ணிக்கை அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
படுகாயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டனர். ஏராளமான பேர் இடிபாடுகளுக்குள் இன்னும் சிக்கியிருப்பதால் மீட்பு நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டோர் கண்காணிப்புப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications